இந்தியா

கணவரின் நண்பர்கள் கொடூர கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் புகார்: விசாரணையில வெளிப்பட்ட குட்டு

Published On 2025-02-28 20:57 IST   |   Update On 2025-02-28 20:57:00 IST
  • கணவரின் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
  • கழுத்து பகுதியில் ரசாயனத்தை ஊசி மூலம் செலுத்தி குப்பைத் தொட்டி பகுதியில் தூக்கி வீசினர் என புகார்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் விகாஸ் தியாகி என்பவர் திருமணம் ஆகாமல் பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். விகாஸ் தியாகியுடன் வாழ்ந்த அந்த பெண் கற்பழிப்பு, கொலை முயற்சி என அடுக்கடுக்கான புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் மூன்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

இறுதியாக கணவரின் நண்பர்கள் தன்னை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பிறப்புறுப்பில் பாட்டிலை திணித்ததாகவும் பரபரப்பு புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோதுதான், புகார் பொய் எனத் தெரியவந்துள்ளது. இதனால் அந்த பெண்ணை போலீசார் கைது சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன மாதம் அந்த பெண் விகாஸ் தியாகியுடன் லிவ்-இன் தொடர்பில் இருந்துள்ளார். விகாஸ் தியாகியின் வீடு காசியாபாத்தில் உள்ள கவி நகரில் உள்ளது. தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கற்பழித்ததாக விகாஸ் தியாகி மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அந்த நேரத்தில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், பாலியல் கொடுமை செய்ததுடன், வயிற்றில் எட்டி உதைத்ததால் கருவில் குழந்தை இறந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

தன்னுடைய புகாரில் இதை தொடர்ந்து கூறி வந்துள்ளார். ஆனால், நீதிபதி முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்த போது தன்னுடைய புகாரில் கூறியதில் இருந்து மாற்றி தெரிவித்துள்ளார். எங்களுடைய உறவு சம்மதத்துடன்தான் நடைபெற்றது. தியாகி என்னை அடிக்க மட்டுமே செய்தார். ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் மருத்துவர்கள் கூறிய அறிவுரைகளை கடைபிடிக்காததால் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் ஜூன் மாதம் கொடுத்த வழக்கில் தனது வாக்குமூலத்தை மாற்றுமாறு போலீஸ் நிலையத்தை அணுகியுள்ளார். அப்போது தியாகி, அவரது மைத்துனர் மற்றும் ஒரு நண்பர்களில் ஒருவர் தன்னை மிரட்டி, அவர்களுக்கு சாதமாக வாக்குமூலம் அளிக்க வைத்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் அதேமாதம் போலீசாரை அணுகி, தான் தியாகியை திருமணம் செய்து கொண்டதாகவும், முன்னதாக தான் அளித்த புகார அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே விசயத்தை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

4 மாதம் கழித்து கடந்த ஜனவரி மாதம், அங்கீகாரம் இல்லாத திருமணம் தியாகி மற்றும் அந்த பெண்ணுடைய தாயார் நடத்தி வைத்ததாகவும், திருமணம் ஆசைவார்த்தி கூறி தன்னை கற்பழித்ததாகவும் புகார் அளித்துள்ளார். மேலும், தியாகி தன்னை அடித்து உதைத்ததுடன், மதுபானத்தை ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் புகார் அளித்துள்ளார். அத்துடன் தியாகி மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் 2-ஆவது முறையாக போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

போலீசார் விசாரணை நடத்தியபோது கூட்டு பாலியல் வன்கொடுமை அந்த பெண்ணின் குற்றச்சாட்டு பொய் எனத் தெரிய வந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் தீக்காயத்திற்கான ஆதாரம் இருந்துள்ளது. இதனால் கடந்த 17-ந்தேதி தியாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தான் மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, தியாகியின் நண்பர்கள் தன்னை கடத்தி சென்றதாகவும், தான் சுயநினைவு இழக்கும் வகையில் மர்ம் பொருள் அடங்கிய ஊசி செலுத்தியதாகவும், பின்னர் அவர்கள் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னுடைய கழுத்துப் பகுதியில் ஏதோ ரசாயன பொருளை செலுத்தியதாகவும், அத்துடன் தன்னுடைய பிறப்புறுப்பில் பாட்டிலை செலுத்தியதாகவும், அதன்பின்னர் தன்னை அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் தூக்கி வீசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை நடைபெற்றது தெரிவித்துள்ளார்.

போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்றதாக கூறிய இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் இருந்து இரவு 8.30 மணிக்கு வெளியேறியதும், பின்னர் காரில் இருந்து இறங்கி வீட்டிற்கு 10.19 மணிக்கு வந்ததும் தெரியவந்துள்ளது. அவருடயை வீட்டிற்கு சாதாரணமாக செல்வதுபோல் சென்றது தெரியவந்தது.

தியாகி நண்பர்கள் அந்த நேரத்தில் எங்கிருந்தார்கள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்தனர். அப்போது அவர்கள் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடங்களில் இல்லை எனத் தெரிய வந்தது. இதற்கிடையே மருத்துவ பரிசோதனையில், ரசாயன பொருளை அவரே அவர் மீது ஊற்றியது தெரியவந்தது.

பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. பின்னர் ஏதோ திட்டத்துடன் தியாகி நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News