இந்தியா

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி- ரூ.5 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்

Published On 2025-03-11 05:59 IST   |   Update On 2025-03-11 05:59:00 IST
  • கோப்பை சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
  • தாவூத் இப்ராஹிமின் ‘டி கும்பல்' ஈடுபட்டு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுடெல்லி:

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்தது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப் பரீட்சை செய்தன. முன்னதாக இந்த போட்டியை வைத்து ரூ.5 ஆயிரம் கோடிக்கு மாபெரும் சூதாட்டம் நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:-

சர்வதேச சூதாட்டக்காரர்களுக்கு விருப்பமானதாக இந்திய அணி உள்ளது. அவர்கள் அனைவரும் நிழல் உலக தாதா கும்பலுடன் தொடர்புடையவர்கள். ஏராளமானோர் போட்டியை பார்க்க துபாயில் குவிந்து இருந்தனர். துபாயில் நடக்கும் சூதாட்டத்தில், பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 'டி கும்பல்' ஈடுபட்டு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதிப் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதானதாகவும், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே, தற்போது விசாரணை துபாய் வரை நீண்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.

Tags:    

Similar News