பீகாரில் நகைக்கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை- இருவர் கைது
- சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
- வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலம் அர்ரா என்ற பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நகைக்கடை ஒன்றில் இன்று சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
நகைக்கடை இன்று வழக்கம்போல் காலை கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென 6க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கையில் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்தனர்.
கெள்ளையர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த நகைக்கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், துப்பாக்கி காட்டி ஊழியர்களை மிரட்டிய கொள்ளையர்கள் நகைக்கடையில் இருந்து சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில், கெள்ளையர்கள் 6 பேரில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கைதானவர்களிடம் இருந்து நகைகள், இருசக்கர வாகனங்கள், 10 தோட்டாக்கள், 2 துப்பாக்கிககளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையே, தப்பியோடிய மற்ற 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.