இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக பெண் எம்எல்ஏ

Published On 2025-03-10 18:31 IST   |   Update On 2025-03-10 18:31:00 IST
  • சுவேந்து அதிகாரிக்கு நெருங்கிய உதவியாளராக இருந்தவர்.
  • ஹல்தியா தொகுதி பெண் எம்.எல்.ஏ. கட்சி தாவியதாக பாஜக-வுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கு நெருங்கிய உதவியாளரான ஹல்தியா தொகுதி பெண் எம்.எல்.ஏ. தபாசி மொண்டல் பாஜக-வில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளார்.

மொண்டலின் முடிவு, சுவேந்து அதிகாரியின் கோட்டையான ஹல்தியா நகர் அமைந்துள்ள புர்பா மெதினிபூர் பாஜக அமைப்புக்கு மட்டுமல்ல, அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக கட்சிக்கும் இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைமையகததில் மாநில அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் முன்னிலையில் தபாசி மொண்டல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

முதலமைச்சரின் வளர்ச்சி முயற்சியில் ஒரு பகுதியாக இருக்க முடிவு செய்துள்ளேன் என தபாசி மொண்டல் தெரிவித்துள்ளார்.

2016-ல் காங்கிரஸ் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு ஹல்தியா தொகுதியில் வெற்றி பெற்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சுவேந்து அதிகாரி விலகி 2021 தேர்தலின்போது பாஜக-வில் இணைந்தபோது, இவரும் பாஜக கட்சியில் இணைந்தார்.

Tags:    

Similar News