இந்தியா
தமிழை விட பழமையான மொழி சமஸ்கிருதம் - பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே பேச்சு
- தமிழ்நாடு கோவில்களில் கூட, சமஸ்கிருதத்தில் மட்டுமே பூஜை செய்யப்படுகிறது.
- ஆங்கிலேயர்களின் மொழியை செயல்படுத்துவதில் மட்டுமே திமுகவினர் ஆர்வம் காட்டுகிறார்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, "தமிழை விட சமஸ்கிருதம்தான் பழமையான மொழி" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "மக்களைத் தூண்டிவிட மட்டுமே திமுக விரும்புகிறது. தமிழ் மிகவும் பழமையான மொழி என்கிறார்கள், ஆனால் சமஸ்கிருதம் அதைவிட பழமையான மொழி.
தமிழ்நாடு கோவில்களில் கூட, சமஸ்கிருதத்தில் மட்டுமே பூஜை செய்யப்படுகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடத்தை திமுக எதிர்க்கிறது. அவர்கள் ஆங்கிலேயர்களின் மொழியை செயல்படுத்துவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று தெரிவித்தார்.