வாக்காளர் பட்டியல் குறித்து விவாதம் நடத்த வேண்டும்: பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தல்
- வாக்காளர்கள் பட்டியலில் ஒரே EPIC எண் பலருக்கு உள்ளதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.
- மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சிகளும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பின.
பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஏராளமான கட்சிகள் வாக்காளர்கள் பட்டியல் குறித்து கேள்வி எழுப்புவதால் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இது தொடர்பாக கேள்வி நேரத்தையடுத்து பூஜ்ஜிய நேரத்தின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல்கள் அரசு தயாரிக்கவில்லை என்ற உங்களுடைய கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இது விசயம் தொடர்பாக விவாதம் நடத்த பேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்கள் குறுித்து கேள்வி எழுப்பப்படுகிறது. மகாராஷ்டிரா உள்பட நாட்டின் எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் கேள்வி எழுப்புகின்றன.
இவ்வாறு ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத், பரத்வான் பாராளுமன்ற தொகுதிகளிலும் அரியானாவில் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் (Electoral Photo Identity Card) ஒரே மாதிரியாக இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குறைபாடுகள் கடந்த 20 வருடத்திற்கு மேலாக உள்ளது. இன்னும் 3 மாதங்களில் சரி செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதற்கு திரிணாமுல் காங்கிரஸ், தேர்தல் ஆணையம் இறுதியாக குற்றத்தை ஏற்றுக் கொண்டு ஒப்புக் கொண்டுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.
அதேவேளையில் ஒரே எபிக் நம்பர் பிரச்சனை இல்லை. இந்த எண்ணை பொருட்படுத்தாமல் அதில் உள்ள தொகுதி, வார்டு ஆகியவற்றை கொண்டு மக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.