இந்தியா
ஜி20 மாநாடு நடைபெறும் பகுதி அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து
- ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
- மின்சார ரெயில் தடம் புரண்டதில் ரெயிலின் ஒரு பெட்டி மட்டும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
டெல்லியல் உள்ள ஜி 20 மாநாடு பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், பைரோன் மார்க் பகுதி அருகே ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஹரியானா மாநிலம் பல்வாலில் இருந்து புதுடெல்லி ரெயில் நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சார ரெயில் தடம் புரண்டதில் ரெயிலின் ஒரு பெட்டி மட்டும் கடுமையாக சேதமடைந்துள்ளது.