இந்தியா

அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை.. பாஜக அரசின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Published On 2024-12-05 03:54 GMT   |   Update On 2024-12-05 03:54 GMT
  • உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை
  • கோயில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும்.

அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அசாமில் திருத்தம் செய்யப்பட்ட கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021ன் படி இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் கோயில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும்.

இந்த சட்டத்தை திருத்தி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அதன்படி அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடையை மீறுபவர்களுக்கு 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.3 முதல் 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி தடைக்கு அசாம் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News