ஏ.டி.எம். மில் பணத்தை நிரப்பாமல் ரூ. 43.76 லட்சத்தை மோசடி செய்த 6 பேர் கும்பல் கைது
- போலீசார் ஊழியர்கள் 6 பேரை பிடித்து விசாரித்தனர்.
- பல மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
பெங்களூருவில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் ஊழியர்கள் சிவு, சமீர், மனோகர், கிரிஷ், ஜக்கேஷ், ஜஸ்வந்த் ஆகிய 6 பேர் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பாமல் சுழற்சி முறையில் ஒவ்வொரு எந்திரத்திலும், பணத்தை மாற்றி, மாற்றி வைத்து ரூ. 43.76 லட்சத்தை மோடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து நிறுவன அதிகாரிகள் அவர்கள் மீது மகாலட்சுமி லேஅவுட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஊழியர்கள் 6 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ஒரு கொள்ளை திரில்லர் படத்தை பின்பற்றி ஏ.டி.எம்.மில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 52 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 3 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்கள் பல மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.