இந்தியா

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்- அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2025-02-08 14:43 IST   |   Update On 2025-02-08 15:57:00 IST
  • ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
  • பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.

இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறேன் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், " டெல்லி சட்டசபையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது மட்டுமல்லாமல் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.

டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜகவினர் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

Tags:    

Similar News