ஹோலி விழாவில் ஆபாசப் பாட்டு.. பெண்ணுடன் விரசமாக நடனமாடிய பீகார் ஆளும் கட்சி எம்எல்ஏ - வைரல் வீடியோ
- பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடலை அவர் பாடினார்.
- நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன்
பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தின் நௌகாச்சியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டணியின் ஹோலி கொண்டாட்டத்தில் ஆளும் ஜேடியு கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் பங்கேற்றார்.
பிரபல பாடகி சாய்லா பிஹாரி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, மேடையேறிய எம்எல்ஏ கோபால் மண்டல் மைக்கை எடுத்து ஆபாசமான பாடல்களை பாடத் தொடங்கினார்.
"பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடல் ஒன்றை அவர் மேடையில் பாடி அனைவரையும் கலங்கடித்தார்.
மேலும் மேடையில் இருந்த பெண் நடனக் கலைஞரை கையை பிடித்து நடனமாடிய அவர், அப்பெண்ணின் கன்னத்தில் 500 ரூபாய் தாளை ஒட்டவைத்தார். மைக்கில் தொடர்ந்து பேசிய கோபால் மண்டல், நான் நன்றாக நடனமாடுவேன் என பலர் கூறுகின்றனர்.
நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன் என்று கூறினார். எனது நடன வீடியோக்கள் வைரலாகி, முதலமைச்சர் நிதிஷ் குமார் என்னை கடிந்து கொள்கிறார். ஆனால் முதலமைச்சர் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று தெரிவித்தார்.
இந்த வீடியோவை குறிப்பிட்டு எதிர்க்கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகள் மீது அரசும், நீதிமன்றங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.