இந்தியா

ராஜஸ்தான் முதல்வரை அவதூறாக பேசியதாக மத்திய மந்திரி கஜேந்திர சிங் மீது வழக்குப்பதிவு

Published On 2023-04-30 11:36 IST   |   Update On 2023-04-30 11:36:00 IST
  • ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை ராஜஸ்தான் அரசியலின் ராவணன் என்று விமர்சித்தார்.
  • மத்திய மந்திரி கஜேந்திரசிங் சவுகாலா மீது ராஜஸ்தான் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

ஜெய்ப்பூர்:

மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் சமீபத்தில் ராஜஸ்தானின் சித்தோர்கரில் நடந்த பா.ஜனதா பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை ராஜஸ்தான் அரசியலின் ராவணன் என்று விமர்சித்தார். மேலும் மாநிலத்தில் ராமராஜ்ஜியத்தை நிறுவ மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே முதல்-மந்திரி அசோக் கெலாட்டை அவதூறாக பேசியதாக மத்திய மந்திரி கஜேந்திரசிங் மீது காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான சுரேந்திர சிங் ஷெகாவத் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு எதிராக இதுபோன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மத்திய மந்திரி கஜேந்திர சிங் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். பா.ஜனதா பேரணியில் அவர் பேசும்போது மத உணர்வுகளை தூண்ட முயன்றார் என்றார்.

இதையடுத்து மத்திய மந்திரி கஜேந்திரசிங் சவுகாலா மீது ராஜஸ்தான் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News