இந்தியா
உ.பி.யில் உள்ள கன்னூஜ் ரெயில் நிலையத்தில் விபத்து: காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு
- விபத்து நடந்த இடத்தில் இருந்து 23 தொழிலாளர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னூஜ் ரெயில் நிலையத்தில் மேற்கூரை கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 23 தொழிலாளர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் 35க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.