இந்தியா
உத்தரப் பிரதேச ரெயில் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விபத்து.. அடியில் சிக்கிய தொழிலாளர்கள்
- இன்று பிற்பகல் 2:39 மணியளவில் நடந்த இந்த விபத்து நடந்துள்ளது
- குறைந்தது 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்னோஜ் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று [சனிக்கிழமை] பிற்பகல் 2:39 மணியளவில் நடந்த இந்த விபத்தில் குறைந்தது 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப்படையினரால் ஆறு தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முதற்கட்ட தகவல்களின்படி, கட்டுமானத்தில் இருந்த கூரையின் ஷட்டர் இடிந்து விழுந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்தது" என்று மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) சுப்ரந்த் குமார் சுக்ல் கூறினார்.