null
இத்தாலி பிரதமருடன் தொடர்புபடுத்தி வந்த மெலோடி மீம்ஸ் குறித்த கேள்விக்கு மோடி கொடுத்த ரியாக்ஷன்
- இத்தாலியைப் பற்றி உங்களுக்கு நிறைய தெரியும் என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள்.
- என்ன சாப்பிட வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது.
Zerodha இணை நிறுவனர் நிகில் கமத் தொகுத்து வழங்கிய 'People by WTF' தொடரின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற வீடியோ நேற்று வெளியானது.
அதில், தன்னைப் பற்றியும் இத்தாலிய இணை ஜோர்ஜியா மெலோனி பற்றியும் வைரலான மீம்ஸ்களை பற்றி மோடி மனம் திறந்துள்ளார்.
இத்தாலியைப் பற்றி உங்களுக்கு நிறைய தெரியும் என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள். அதைப் பற்றி ஏதாவது பகிர விரும்புகிறீர்களா? அந்த மீம்ஸை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று காமத் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, மீம்ஸ்கள் எப்போதும் வந்துக்கொண்டேதான் இருக்கும்... மீம்ஸ்கள், சமூகவலைதள விவாதங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை. நான் உணவுப் பிரியன் அல்ல, எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர்கள் வழங்கும் உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவேன்.
எனக்கு ஒரு மெனு கொடுத்தால், என்ன சாப்பிட வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது. நான் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்தபோது மெனுவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவும் என் முன் உள்ள உணவும் ஒன்றா என்று கூட எனக்குத் தெரியாது. அதனால் அப்போதெல்லாம் மறைந்த அருண் ஜெட்லியிடம்தான் உணவை ஆர்டர் செய்யக் கூறுவேன் என்று தெரிவித்தார்.