இந்தியா

கர்நாடகாவில் ஆதியோகி சிலையை திறந்துவைத்தார் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை

Published On 2023-01-16 05:04 IST   |   Update On 2023-01-16 05:04:00 IST
  • சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் உருவாக்கப்பட்டது.
  • கோவை ஈஷா ஆதியோகி திருவுருவம் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது

பெங்களூரு:

கோவையில் உள்ள ஆதியோகி திருவுருவத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு திறந்து வைத்தார். இதையடுத்து, ஆதியோகியை தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் கோவைக்கு வருகை தருகின்றனர். ஆதியோகி திருவுருவமானது உலகளவில் மிகப்பெரிய மார்பளவு சிலை என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையே, கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி திருவுருவம் போன்று பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகர சங்கராந்தி தினமான நேற்று சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு ஆதியோகி திருவுருவத்தை திறந்து வைத்தார்.

திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி சப்த ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும் 'ஆதியோகி திவ்ய தரிசனம்' நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் மற்றும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதற்கு முன்பு, கடந்த அக்டோபர் மாதம் அங்கு நாக பிரதிஷ்டை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News