இந்தியா
குன்னூரில் பஸ் கவிழ்ந்து பலியானவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி
- குன்னூர் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த 9 பேர் பலியானார்கள்.
- விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஊட்டி மலைப்பாதையில் குன்னூர் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த 9 பேர் பலியானார்கள். 52 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரண நிதியும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் குன்னூர் அருகே சுற்றுலா பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடியும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.