இந்தியா
டெல்லி சட்டசபை தேர்தல்- ஜனநாயக கடமை ஆற்றினார் ராகுல் காந்தி
- ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.
- கடந்த முறை குடும்பத்துடன் சென்று வாக்களித்த ராகுல் காந்தி இம்முறை தனியாக சென்று வாக்களித்தார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.
டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு காலை தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிர்மான் பவன் வாக்குச்சாவடிக்குயில் தனது வாக்கினை பதிவு செய்தார். பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு வந்த ராகுல் காந்தி தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.
கடந்த முறை குடும்பத்துடன் சென்று வாக்களித்த ராகுல் காந்தி இம்முறை தனியாக சென்று வாக்களித்தார்.