இந்தியா

நாட்டின் முதல் கிராமம் எது தெரியுமா?

Published On 2023-04-26 02:43 GMT   |   Update On 2023-04-26 02:43 GMT
  • இந்த மானா கிராமம், பத்ரிநாத் அருகே உள்ளது.
  • உத்தரகாண்டில், இந்திய-சீன எல்லையில் மானா என்ற கிராமம் உள்ளது.

டேராடூன் :

வட மாநிலமான உத்தரகாண்டில், இந்திய-சீன எல்லையில் மானா என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமம்தான் நாட்டின் முதல் கிராமம் என காட்டும் பெயர்ப்பலகையை எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ.) வைத்துள்ளது.

இது குறித்து உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "இப்போது மானா கடைசி கிராமமாக அறியப்படாது. இது நாட்டின் முதல் கிராமம் ஆகும்" என கூறி உள்ளார்.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி கிராமத்துக்கு வந்தபோது, "எல்லை கிராமங்கள் கடைசி கிராமங்கள் என கூறப்படுவது போல அல்ல, அவைதான் நாட்டின் முதல் கிராமங்கள்" என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

இந்த மானா கிராமம், பத்ரிநாத் அருகே உள்ளது. அங்கே செல்கிற பக்தர்கள் இந்த கிராமத்தைப் பார்க்கச்செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News