உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதை தினமும் பார்ப்பீர்களா?.. பிரபல யூடியூபர் சர்ச்சைப் பேச்சு
- "பீர்பைசெப்ஸ்" என்று பரவலாக அறியப்படும் பாட்காஸ்டரும் யூடியூபருமான ரன்வீர் அல்லாபாடியா
- மும்பையில் நடந்த India's Got Latent நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் தோன்றினார்
"பீர்பைசெப்ஸ்" என்று பரவலாக அறியப்படும் பாட்காஸ்டரும் யூடியூபருமான ரன்வீர் அல்லாபாடியா கருத்து ஒன்றால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மும்பையில் நடந்த India's Got Latent நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் தோன்றிய ரன்வீர், போட்டியாளர் ஒருவரிடம் ஆத்திரமூட்டும் கேள்வி ஒன்றை கேட்டு சர்ச்சை கிளப்பினார்.
போட்டியாளரை பார்த்து, "உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்தடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார்.
ரன்வீர் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக ரன்வீர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர அரசியல் தலைவர்களும் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தனது பேச்சுக்கு ரன்வீர் மன்னிப்பு கேட்டுள்ளார்.