இந்தியா
VIDEO: மதுபோதையில் காரை ரெயில் தண்டவாளத்தில் பார்க் செய்த ஓட்டுநர்
- கோலார் மாவட்டம் தியாகர் ரெயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- விபத்து ஏற்படுத்திய ராகேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் கோலாரில் ஓட்டுநர் ஒருவர் மதுபோதையில் காரை ரெயில் தண்டவாளத்தில் பார்க் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோலார் மாவட்டம் தியாகர் ரெயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராகேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கிரேன் மூலம் காரை வெளியே எடுத்து ரெயில் போக்குவரத்தை அதிகாரிகள் சரி செய்தனர்.