மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
- அரசியல்சாசனத்திற்கு கட்டுப்பட்ட ஆளுநர் அரசியல் சாசன விதிமுறைப்படி நடந்து கொள்வதில்லை.
- ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், அதனை கிடப்பில் போடக்கூடாது
மசோதா நிலுவை, துணை வேந்தர் நியமனம் ஆகிய விவகாரங்களில் ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததது, பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்தது, அவையிலிருந்து வெளியேறியது என ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு தரப்பு சார்பில் அடுக்கடுக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்: துணை வேந்தர்கள் நியமிக்கப்படாததால் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசியல் சாசனப்படி ஆளுநர் நடந்துகொள்வதில்லை ஆளுநர் தேவையா என்ற வாதங்கள் ஒருபக்கம் நடக்கிறது. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்
தண்டனை நிறுத்திவைத்த பின்னர் செந்தில்பாலாஜி அமைச்சராக பதவிவேற்ற சென்றால் :தவிப்பிரமாணம் செய்து வைக்க மறுக்கிறார். அரசியல்சாசனத்திற்கு கட்டுப்பட்ட ஆளுநர் அரசியல் சாசன விதிமுறைப்படி நடந்து கொள்வதில்லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் அந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை
நீதிபதிகள்: மசோதாக்களை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் என்ன நிவாரணம் வழங்க முடியும்?
தமிழ்நாடு அரசு: குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்டால் ஒன்றிய மத்திய ஆலோசனைப் படி குடியரசுத் தலைவர் முடிவு செய்வார் அதேவேளையில், அரசியல் சாசன விதிமுறை 200ன் படி ஆளுநர் செயல்பட உத்தரவிட வேண்டும். மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட முடியாது. எனவே சட்டப்பிரிவு 200ன் படி செயல்பட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்
ஐகோர்ட் தொடர்பான மசோதாவை தவிர வேறு எந்த மசோதாவையும் 2ஆவது முறையாக ஆளுநரால் ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது. 2023-ல் அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மீண்டும் ஆளுநர் காலதாமதம் செய்கிறார். அரசியல் சாசனம் கால நிர்ணயம் செய்யவில்லை என்பதற்காக ஆளுநர் முடிவுகளை எடுக்காமல் இருக்க முடியாது.
நீதிபதிகள்: ஒருவேளை மசோதா சரியாக இல்லை என ஆளுநர் கருதினால் என்ன செய்வது ?
தமிழ்நாடு அரசு: அவருக்கு வேறு எந்த வழியும் இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும். ஆண்டுக் கணக்கில் ஆளுநர் மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் உள்ளார். "As soon as possible" முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை
மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் அரசியல் சாசன விதிகளின் கீழ், ஆளுநருக்கு கூடுதல் வாய்ப்பு என்பது இல்லை. அவருக்கு விருப்பமான வழியில், அரசியல் சாசன விதிகளை புரிந்து செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளார்.
மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக சட்டப்பேரவைக்கு கூறுகிறார். இதன் பொருள், மீண்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்ட மன்றத்திற்கு போய்விட்டது என்பதுதான். இது அரசியலமைப்பின் மீதான தாக்குதல் ஆகும்.
எந்தக் காரணத்தையும் கூறாமல், மசோதாவை கிடப்பில் போட்டு வைப்பது சட்ட விரோதம் ஆகும். மேலும், கேசரி ஹந்த் வழக்கின் தீர்ப்பின்படி, சட்டமன்றத்தில் மறுபடியும் மசோதா இயற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், அதனை கிடப்பில் போடக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில், ஆளுநர் - தமிழக அரசு மோதல் விவகாரத்தால் மக்களும் மாநில அரசும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசுத் தரப்பின் வாதங்கள் இன்று நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கை நாளை மறு தினத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என நாளைமறுநாள் விசாரணையின் போது தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆளுநர் அரசியல்சாசனப்படி பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என ஆளுநர் தரப்புக்கு அறிவுரை வழங்கிய உச்சநீதிமன்றம் ஆளுநர் விவகாரம் தொடர்பான வழக்கில் larger intrest என்ற அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தது.