இந்தியா

நியாயமான முறையில் தேர்தலை நடத்தவேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

Published On 2025-02-04 18:56 IST   |   Update On 2025-02-04 18:56:00 IST
  • இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க,காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
  • டெல்லி முதல் மந்திரி அதிஷி மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

புதுடெல்லி:

டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்தத் தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

இதற்கிடையே, விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து வரும் டெல்லி போலீஸ் கல்காஜி தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல் மந்திரி அதிஷி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அதிஷி மற்றும் முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோர் தேர்தல் ஆணையத்துக்கு சென்றனர். அவர்கள் தேர்தல் நியாயமாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கூறுகையில், இன்று எங்களை சந்திப்பதற்கு தேர்தல் ஆணையம் விதிவிலக்கு அளித்துள்ளது. அவர்களுக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் சில பிரச்சனைகளை எழுப்பியதால் சில இடங்களில் வன்முறையும், குண்டர் சண்டையும் நடந்துள்ளது. கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், ஒழுங்கான முறையில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. பெரிய அளவிலான வாக்காளர் அடக்குமுறை குறித்தும் அவர்களை எச்சரித்தோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News