இந்தியா

VIDEO: பீகாரில் நடனமாடிய பெண்களுக்கு மேடையில் பணம் கொடுத்த இளைஞர் சுட்டு கொலை

Published On 2025-02-04 21:40 IST   |   Update On 2025-02-04 21:40:00 IST
  • நடனமாடி கொண்டிருந்த பெண்களுக்கு அஞ்சனி குமார் என்பவர் பணம் கொடுத்து கொண்டிருந்தார்.
  • அஞ்சனி குமாரின் தலையில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் திலக விழாவின் போது இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திலக விழாவின் போது மேடையில் நடனமாடி கொண்டிருந்த பெண்களுக்கு 27 வயதான அஞ்சனி குமார் என்பவர் பணம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு கீழே இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். அஞ்சனி குமாரின் தலையில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவர் உடனடியாக சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

பிந்து சர்மா மற்றும் பஞ்சாயத்துத் தலைவர் மகேஷ் சர்மா ஆகியோர் தான் அஞ்சனி மரணத்திற்கு காரணம் என்று இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். பிஏசிஎஸ் தேர்தலில் அவர்களுக்கு எதிரான வேட்பாளரை அஞ்சனி ஆதரித்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆகையால் திட்டம் போட்டு அஞ்சனியை கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News