இந்தியா
null

ஏழை மக்களுடன் போட்டோ எடுப்பது சிலருக்கு பொழுதுபோக்கு - ராகுல் காந்தியை தாக்கி பேசிய மோடி

Published On 2025-02-04 18:34 IST   |   Update On 2025-02-04 18:47:00 IST
  • சில அரசியல் தலைவர்கள் சொகுசு குளியல் தொட்டி, ஷவர்களில் கவனம் செலுத்துகின்றனர்.
  • ஏழைகளின் இல்லங்களுக்கு சென்று போட்டோ எடுப்பதை சிலர் வேலையாக கொண்டுள்ளனர்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடந்த விவாதம் நடைபெற்றது.

அதன் முடிவில் இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் நிறைய எதிர்மறை கருத்துக்கள் உள்ளன.

* மற்றவர்களை போல சொகுசு மாளிகையில் தாம் வாழவில்லை. மாளிகைகளில் வசிக்காமல், ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

* மற்றவர்களை போல் மாளிகை கட்டிக்கொள்ளாமல் ஏழைகளின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்திருக்கிறேன்

* சில அரசியல் தலைவர்கள் சொகுசு குளியல் தொட்டி, ஷவர்களில் கவனம் செலுத்துகின்றனர்.

* நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காக பாஜக அரசு மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது

* ஏழை மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது சிலருக்கு பொழுதுபோக்காகி விட்டது.

* ஏழைகளின் இல்லங்களுக்கு சென்று போட்டோ எடுப்பதை சிலர் வேலையாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஜனாதிபதி உரை அலுப்பூட்டுவதாக தான் இருக்கும்" என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி, கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News