இந்தியா

மகாராஷ்டிரா அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியில்தான் உரையாட வேண்டும் என உத்தரவு

Published On 2025-02-04 17:17 IST   |   Update On 2025-02-04 17:17:00 IST
  • அனைத்து அரசு அதிகாரிகளும் மராத்தியில் தான் பேச வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • அரசின் உத்தரவை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மகாராஷ்டிராவில் அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியில்தான் உரையாடல்கள் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அரசின் உத்தரவை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர்கள் மற்றும் மராத்தி மொழி தெரியாதவர்களை தவிர மற்ற அனைவருடனும் அனைத்து அரசு அதிகாரிகளும் மராத்தியில் தான் பேச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்த விதி அனைத்து அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை ஊக்குவித்தல் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News