இந்தியா

ஊருக்குள் புகுந்த யானைகள் மீது தாக்குதல்.. பெண் யானை உயிரிழந்த சோகம்

Published On 2024-08-19 18:29 IST   |   Update On 2024-08-19 18:32:00 IST
  • கூர்மையான ஆயுதம் தாக்கியதில், ஒரு பெண் யானை பலத்த காயமடைந்தது.
  • நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், ஜர்கிராம் மாவட்டத்தில் குட்டி யானைகளுடன் சுமார் 6 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன.

இதனால், பீதியடைந்த மக்கள் யானையை விரட்டியடிக்க முயன்றனர். அப்போது, யானைகள் கோபமடைந்து அங்குள்ள சுற்றுசுவர்களை இடித்து சேதப்படுத்தின.

மேலும், யானைகள் தாக்கியதில் அந்த ஊரில் இருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, யானைக் கூட்டத்தை விரட்ட ஹுல்லா அணியினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் தீப்பந்தங்களை யானைகள் மீது எறிந்து விரட்டியடித்தனர்.

இதில், கூர்மையான ஆயுதம் தாக்கியதில், ஒரு பெண் யானை பலத்த காயமடைந்தது. இதனால் அந்த யானை சரியாக நடக்க முடியாமல் தவித்தது.

கூர்மையான தீப்பந்தம் பெண் யானையின் முதுகெலும்பில் சிக்கி பாதிப்படைய செய்தது. அந்த யானையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலன் இல்லாமல் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News