Go Back Governor: உ.பி. சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கோஷம் - வீடியோ
- எத்தனை பேர் குளித்தனர் என்பது குறித்து தினமும் அறிக்கை வெளியிடுகிறார்கள்
- உ.பி.யின் வளர்ச்சிக்காக இரட்டை எஞ்சின் பாஜக அரசு முன்னெப்போதும் இல்லாத அளவு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றும்போது எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 'ஆளுநரே திரும்பி போ' (Go Back Governor) என கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
சட்டமன்றத்தில் ஆளுநர் ஆனந்திபேசன் படேல் உரையாற்றியபோது, சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 'கோ பேக் கவர்னர்' என்ற முழக்கத்தை எழுப்பினர்.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது ஏற்பட்ட மரணங்களுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் மாநில சட்டமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேச அரசு மகா கும்பமேளாவை ஏற்பாடு செய்தது. ஆனால் நிர்வாகத்தில் பல தவறுகள் இருந்ததால் பலர் உயிரிழந்தனர்.
அரசு இறப்பு எண்ணிக்கையை கூட வெளியிடவில்லை. எத்தனை பேர் குளித்தனர் என்பது குறித்து தினமும் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால் இறப்பு எண்ணிக்கையை வெளியிட மறுக்கிறார்கள் என்று என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசுதோஷ் சின்ஹா குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், மார்ச் 5 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் அமைதியாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்தார்.
அமர்வை சுமூகமாக நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பொறுப்பும் கூட. கடந்த 8 ஆண்டுகளில் உ.பி.யின் வளர்ச்சிக்காக இரட்டை எஞ்சின் பாஜக அரசு முன்னெப்போதும் இல்லாத அளவு செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.
முன்னதாக மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி மவுனி அமாவசையை முன்னிட்டு அதிக மக்கள் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தாதாக அரசு தெரிவித்தது. அவர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கையை அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.