இந்தியா

பெண் டாக்டர் கொலை தொடர்பாக மம்தா பானர்ஜிக்கு ஹர்பஜன் சிங் கடிதம்

Published On 2024-08-18 13:45 GMT   |   Update On 2024-08-18 13:45 GMT
  • கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.
  • குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை கொடூரமானதாக இருக்கவேண்டும்.

கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலில் அவர்கள் தங்களின் கடமையை அர்ப்பணிப்புடன் செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஒரு சமூகமாக பெண்களுக்கு பாதுகாப்பான, மதிப்புமிக்க வீடு மற்றும் பணியிடத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது நமது கடமை. குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை கொடூரமானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் தொடராது. இப்போது இல்லையென்றால் எப்போது? நடவடிக்கைக்கான நேரமிது" என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

Similar News