ரூ. 15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி குறைய வாய்ப்பு
- பழைய முறையில் வரி செலுத்த விரும்பினால் வாடகை உள்ளிட்ட விலக்க அளிக்கப்படும்.
- 2020 முறைப்பட்டி வரி செலுத்த விரும்பினால் வரி குறையும், விலக்கு அதிக அளவில் இருக்காது.
வருடத்திற்கு 3 லட்சம் முதல் 15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வருமான வரி கட்ட வேண்டியிருக்கும். அதிகபட்சமாக 30 சதவீதம் வருமான வரி கட்ட வேண்டியிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யக்கூடிய பட்ஜெட்டில் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரியில் சலுகை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுத்தரவர்க்கத்தினர் பயன்பெறும் வகையிலும், பொருளாதார மந்த நிலையை சரிகெட்டும் வகையில் நுகர்வை அதிகரிக்கும் வகையிலும் அரசு இந்த அறிவிப்பை வெளியிடலாம் எனத் தெரிகிறது.
இதன்மூலம் வருமான வரி கட்டும் ஒரு கோடி பேர் பயனடைவார்கள். குறிப்பாக வாழ்வாதார செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நடவடிக்கை, வீட்டு வாடகை போன்ற விலக்குகளை நீக்கும் 2020 வரி முறையைத் தேர்வு செய்தால், கோடிக்கணக்கான வரி செலுத்துவோருக்கு குறிப்பாக அதிக வாழ்க்கைச் செலவுகளால் சுமையாக இருக்கும் நகரவாசிகளுக்கு பயனளிக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் 3 லட்சம் முதல் 15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்களுக்கு 5 முதல் 20 சதவீதமும், அதிகபட்சமாக 30 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
வருமான வரி செலுத்துவோர் இரண்டு முறைகளை பயன்படுத்தலாம். ஏற்கனவே இருக்கும் வீட்டு வாடகை மற்றும் இன்சூரன்ஸ் விதிவிலக்கு. மற்றொன்று 2020-ல் அறிமுகம் செய்யப்பட்ட முறை. இதில் வரி சற்று குறைக்கப்படும். ஆனால் அதிகப்படியான விதிவிலக்கு இருக்காது.
எந்த அளவிலான வரிச்சலுகை என்பது முடிவு செய்யவில்லை. பிப்ரவரி 1-ந்தேதி தொடங்கும்போது இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நிதியமைச்சகம் உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த புதிய திட்டத்தால் ஏற்படும் வருவாய் இழப்பு குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், வருமான வரி குறைப்பால் அதிகமான மக்கள் புதிய சிஸ்டத்தை தேர்வு செய்வார்கள்.
10 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம் பெறும் நபர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.