இந்தியா
கூரையை சரிசெய்யாமல் குடையை மட்டும் கொடுப்பதுபோல்.. இந்த பட்ஜெட் வெறும் Patch work தான் - சசி தரூர்

கூரையை சரிசெய்யாமல் குடையை மட்டும் கொடுப்பதுபோல்.. இந்த பட்ஜெட் வெறும் Patch work தான் - சசி தரூர்

Published On 2025-03-25 12:49 IST   |   Update On 2025-03-25 12:49:00 IST
  • உங்கள் பிரேக்குகளை என்னால் சரிசெய்ய முடியாது, அதனால் நான் சத்தமாக அடிக்கும் ஹாரனை தருகிறேன்
  • 77 நாடுகளில் ஜிஎஸ்டி உள்ளது, ஆனால் அவை ஒன்று அல்லது இரண்டு வரிகளை மட்டுமே விதிக்கின்றன.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் பட்ஜெட் குறித்து திருவானந்தபுர காங்கிரஸ் எம்பி சசி தரூர் விமர்சித்துள்ளார்.

நேற்றைய கூட்டத்தில் அவையில் பேசிய அவர், நிதியமைச்சரின் பட்ஜெட் உரை, 'உங்கள் பிரேக்குகளை என்னால் சரிசெய்ய முடியாது, அதனால் நான் சத்தமாக அடிக்கும் ஹாரனை தருகிறேன் ' என்று கூறும் கேரேஜ் மெக்கானிக்கை நினைவூட்டியது. மேலும், நிதி மசோதா வரி செலுத்துவோரிடம் கூரையை சரிசெய்ய முடியவில்லை, ஆனால் நான் உங்களுக்கு ஒரு குடையை கொண்டு வந்தேன் என்று சொல்வது போல் இருந்தது.

இந்த நிதி மசோதா ஒட்டுவேலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டிற்கு தெளிவு, உறுதிப்பாடு மற்றும் தீர்க்கமான தலைமை தேவைப்படும் நேரத்தில், அரசாங்கத்தின் பொருளாதார மேலாண்மை கட்டமைப்பு சவால்களால் பாதிக்கப்பட்டுள்ளது

உலகிலேயே மிகவும் குழப்பமான மற்றும் சிக்கலான ஜிஎஸ்டி கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்று தரூர் கூறினார்.

நாம் அனைவரும் கோரி வரும் எளிமையான வரிக்கு பதிலாக, இந்தியாவில் குழப்பமான ஜிஎஸ்டி விகிதங்கள் உள்ளன. இதில் உலகிலேயே மிக உயர்ந்த 28 சதவீத வரி அடங்கும். இருப்பினும், வரி வருவாய் இன்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதமே உள்ளது.

77 நாடுகளில் ஜிஎஸ்டி உள்ளது, ஆனால் அவை ஒன்று அல்லது இரண்டு வரிகளை மட்டுமே விதிக்கின்றன. நமது நாட்டில் இந்த பல-விகித அமைப்பு வணிகங்களுக்கான சுமையை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News