இந்தியா

மகா கும்பமேளா இடத்தில் மந்திரிசபை கூட்டத்தை நடத்துவதா?- யோகி ஆதித்யநாத் அரசுக்கு அகிலேஷ் யாதவ் கண்டனம்

Published On 2025-01-23 12:05 IST   |   Update On 2025-01-23 12:05:00 IST
  • அரசியல் நிகழ்வுகளுக்கு கும்பமேளா சரியான இடம் அல்ல.
  • வக்பு நிலத்தை அபகரிப்பதே பா.ஜ.க. அரசின் நோக்கமாக இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது 54 மந்திரிகளுடன் கங்கையில் புனித நீராடினார். மகா கும்பமேளாவையொட்டி யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பு மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதற்கு சமாஜ்வாடி கட்சி தலைவரும், உ.பி.முன்னாள் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அரசியல் நிகழ்வுகளுக்கு கும்பமேளா சரியான இடம் அல்ல. அரசியல் செய்தியை வழங்க பா.ஜ.க. அரசு அங்கு மந்திரிசபை கூட்டத்தை நடத்துகிறது. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வினர் மாபியாவாக செயல்படுகின்றனர். வக்பு நிலத்தை அபகரிப்பதே பா.ஜ.க. அரசின் நோக்கமாக இருக்கிறது.

இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News