இந்தியா

ஷீலா தீட்ஷித் வளர்ச்சி மாடலை டெல்லி விரும்புகிறது: ராகுல் காந்தி

Published On 2025-01-23 16:00 IST   |   Update On 2025-01-23 16:00:00 IST
  • மோசமான கட்டுமானம், பணவீக்கம், வேலையின்மை, மாசு, ஊழல் கொண்ட டெல்லியாக உள்ளது.
  • பிரதமர் மோடி மற்றும் கெஜ்ரிவாலின் பொய் பிரசாரம் மற்றும் பி.ஆர். மாடலை விரும்பவில்லை.

டெல்லி மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. மனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் மற்றும் பாஜக தேசிய தலைவர்கள் தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று சதார் பஜார் தொகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பேச இருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடைசி நேரத்தில் பிரசாரம் செய்ய வர முடியாது என்பதை தெரிவித்து, அவர் பேசக்கூடிய தகவல்களை கட்சி தலைவர் மூலம் தெரிவிக்க வைத்தார்.

இந்த நிலையில் இன்று பேஸ்புக் சமூக இணைய தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மோசமான கட்டுமானம், பணவீக்கம், வேலையின்மை, மாசு, ஊழல் கொண்ட டெல்லியாக உள்ளது. டெல்லி ஷீலா தீட்ஷித்தின் அதே உண்மையான வளர்ச்சி மாடலை தற்போது விரும்புகிறது. பிரதமர் மோடி மற்றும் கெஜ்ரிவாலின் பொய் பிரசாரம் மற்றும் பி.ஆர். மாடலை விரும்பவில்லை.

இவ்வாறு ராகுல் காந்தி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வித்தியாசம் இல்லை. அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் அவர்களுடைய உரிமைகளை பெறுவதை இருவரும் விரும்பவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News