இந்தியா

மகாராஷ்டிரா: போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறியதும் பா.ஜ.க.வில் இருந்து சிவசேனாவுக்கு தாவிய பெண் தலைவர்

Published On 2024-10-29 01:31 GMT   |   Update On 2024-10-29 05:19 GMT
  • பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார்.
  • பா.ஜ.க.வில் இருந்து விலகியதும், வாய்ப்பு வழங்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாகாயுதி கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணியில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.

தற்போது இந்த கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு ஏற்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர்களாக இருந்தவர் ஷைனா என்.சி. இவர் நேற்று திடீரென பா.ஜ.க.-வில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.

கட்சியில் சேர்ந்த உடனே மும்பாதேவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

மும்பாதேவி தொகுதி மும்பை மக்களவை தொகுதிக்குள் வருகிறது. இந்த தொகுதியில் 2009-ல் இருந்து காங்கிரசை சேர்ந்த அமின் பட்டேல் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

முன்னதாக பா.ஜ.க. ஷைனா என்.சி.-ஐ வொர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரேவை எதிர்த்து களம் இறக்க விரும்பியது. ஆனால் சிவசேனா அந்த தொகுதியில் மிலிந்த் தியோராவை களம் இறக்கியது.

பா.ஜ.க. முன்னாள் மந்திரி ராவ்சாஹேப் தன்வே மகள் சஞ்ஜனா ஜாதவ் கன்னத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டள்ளது. முன்னாள் எம்.எல்.எ. அஷோக் பாட்டீல் பந்தப் மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்ப வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News