இந்தியா

தலையில் பட்டாசு பெட்டிகளுடன் நடனம் ஆடிய வாலிபர்

Published On 2024-04-17 04:14 GMT   |   Update On 2024-04-17 04:14 GMT
  • எதிர்பாராதவிதமாக தீப்பொறிகள் பட்டாசு பெட்டி மீது விழுந்து அவை வெடிக்க தொடங்குகின்றன.
  • வீடியோ வைரலான நிலையில் வாலிபரின் செயலை விமர்சித்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

திருமண ஊர்வலங்களின் போது பட்டாசுகளை வெடித்து பிரமாண்ட வரவேற்பு அளிப்பது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

சில நேரங்களில் பட்டாசுகள் வெடிக்கும் போது விபரீதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அது போன்ற ஒரு சம்பவம் குறித்த வீடியோ எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது.

கார்த்திக் மீனா என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒரு வாலிபர் திருமண ஊர்வலத்தில் நடனம் ஆடியபடி செல்கிறார். அப்போது திடீரென அந்த நபர் பட்டாசு பெட்டிகளை தலையில் தூக்கி வைத்து நடனம் ஆடுகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பொறிகள் பட்டாசு பெட்டி மீது விழுந்து அவை வெடிக்க தொடங்குகின்றன.

மேலும் அந்த நபரின் உடை மீது தீ பரவுவது போன்றும், அதில் இருந்து தப்பிக்க அந்த நபர் முயற்சி செய்வது போன்றும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் வாலிபரின் செயலை விமர்சித்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News