இந்தியா
நாயை குளிப்பாட்ட வெந்நீர்... வாட்டர் ஹீட்டர் கம்பியை தவறுதலாக கைக்கு இடையில் வைத்த நபர் உயிரிழப்பு
- தண்ணீர் சூடாக்கி விட்டதா என்று பார்ப்பதற்கு வாட்டர் ஹீட்டர் கம்பியை எடுத்து பார்த்துள்ளார்.
- அப்போது மின்சாரம் பாய்ந்து மகேஷ் பாபு மயங்கி விழுந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரில் மகேஷ்பாபு என்பவர் தனது வளர்ப்பு நாயை குளிப்பாட்ட வாட்டர் ஹீட்டர் கம்பியை பயன்படுத்தி வெந்நீர் போட்டுள்ளார்.
அப்போது தண்ணீர் சூடாக்கி விட்டதா என்று பார்ப்பதற்கு வாட்டர் ஹீட்டர் கம்பியை எடுத்து பார்த்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. அப்போது வாட்டர் ஹீட்டர் கம்பியை தவறுதலாக தனது கைக்கு அடியில் அவர் வைத்துள்ளார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து மகேஷ் பாபு மயங்கி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அவரது மனைவி துர்கா கணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இருந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.