இந்தியா

சைஃப் அலி கான் வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு.. கைரேகை விவகாரம் பொய் - மும்பை போலீஸ்

Published On 2025-01-27 12:59 IST   |   Update On 2025-01-27 12:59:00 IST
  • தானேவில் வைத்து வங்கதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
  • ஷரிபுல் இரத்த மாதிரிகள் மற்றும் உடைகள் தடயவியல் ஆய்வகத்துக்கு [FSI] அனுப்பப்பட்டுள்ளன

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், ஜனவரி 16 அன்று மும்பை பாந்ராவில் உள்ள தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் என்று சந்தேகத்தின் பேரில் ஜனவரி 19 அன்று, தானேவில் வைத்து வங்கதேசத்தைச் சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது என்ற 30 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

 

ஆனால் அவரது கை ரேகை, சைஃப் அலி கான் வீட்டில் இருந்து பெறப்பட்ட 19 கைரேகை மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால் ஊடங்களில் வெளியான இந்த தகவலை மும்பை போலீஸ் மறுத்துள்ளது. கைரேகை ஒத்துபோகின்றனவனா என்பது குறித்த அறிக்கை இன்னும் ஆய்வகத்தில் இருந்து வரவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கைதுசெய்யப்பட்ட ஷரிபுல் உடைய காவலை ஜனவரி 29 ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

ஷரிபுல் விசாரணைக் குழுவுடன் ஒத்துழைக்கவில்லை என்றும், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அவர் எங்கிருந்து வாங்கினார் என்பதை இன்னும் கூறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

மேலும் ஷரிபுல் இரத்த மாதிரிகள் மற்றும் உடைகள் தடயவியல் ஆய்வகத்துக்கு [FSI] அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என மும்பை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tags:    

Similar News