ஊழல் புகார்: செபி முன்னாள் தலைவர் மீது எப்ஐஆர் பதிய நீதிமன்றம் உத்தரவு
- செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார்
- அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வந்தது.
இதனிடையே இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பின் (செபி) தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார் இவர் இப்பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நியமனக்குழு பிறப்பித்தது.
இந்நிலையில், செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவின் பேரில் நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத்ராவ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.