பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.84 லட்சம் கோடி ரூபாய்
- கடந்த மாதம் (பிப்ரவரி) மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 1.84 லட்சம் கோடி ரூபாய்.
- இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 9.1 சதவீதம் அதிகம்.
கடந்த மாதம் (பிப்ரவரி) மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 1.84 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 9.1 சதவீதம் அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டின் வசூல் 1.42 லட்சம் கோடி ரூபாய். இறக்குமதி மூலம் 41.072 கோடி ரூபாய் வரி வசூல் கிடைத்துள்ளது. இது 5.4 சதவீதம் அதிகமாகும்.
மத்திய ஜி.எஸ்.டி. மூலம் 35,204 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டி. மூலம் 43,704 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 90,870 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.
20,889 கோடி ரூபாய் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 17.3 சதவீதம் அதிகமாகும். 2025 பிப்ரவரியில் நிகர ஜி.எஸ்.டி. வசூல் 8.1 சதவீதம் உயர்ந்து 1.63 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 1.68 லட்சம் கோடி ரூபாய் ஆகும். நிகர ஜி.எஸ்.டி. வசூல் 1.50 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
கடந்த ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி. வசூல் 1.96 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.