இந்தியா
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்- மத்திய அமைச்சர், காங்கிரஸ் தலைவர் வாழ்த்து
- பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கங்களும், அன்பான வாழ்த்துகளும். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அரசியலமைப்பை பாதுகாக்கவும் ஜனநாயக கொள்கையை நிலைநிறுத்தவும் ஒன்றாக போராடுவோம். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.