இந்தியா
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி
- எனது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
- இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, அரசியலமைப்பை காப்பதற்கான உறுதிப்பாட்டில் தொடர்ந்து ஒன்றாக நிற்போம்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எனது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, அரசியலமைப்பை காப்பதற்கான உறுதிப்பாட்டில் தொடர்ந்து ஒன்றாக நிற்போம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.