பீகாரில் 15 வருட வாகனங்களை போன்று 20 ஆண்டுகால என்.டி.ஏ. அரசு அகற்றப்பட வேண்டும்: தேஜஸ்வி யாதவ்
- பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான 20 வருட என்.டி.ஏ. அரசு, தற்போது மோசமான வாகனமாக மாறிவிட்டது.
- 20 வருடத்திற்கும் மேலாக மோசமான என்.டி.ஏ. அரசை ஏன் மாநிலத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்?.
15 வருட பழைய வாகனங்களை அகற்றுவதை போன்று, 20 வருடத்திற்கும் மேலாக பீகார் மக்களுக்கு சுமையாகி வரும் என்.டி.ஏ. கூட்டணியை அகற்ற வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான 20 வருட என்.டி.ஏ. அரசு, தற்போது மோசமான வாகனமாக மாறிவிட்டது. பீகாரில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படும் வகையில் அதிக அளவில் மாசுவை வெளியிடும் 15 வருடத்திற்கும் அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், 20 வருடத்திற்கும் மேலாக மோசமான என்.டி.ஏ. அரசை ஏன் மாநிலத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்?. இந்த அரசு பீகார் மக்களுக்கு சுமையாகிவிட்டது. இது கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.
20 வருடத்திற்கு மேலாக நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மோசமான மாசு என்ற வறுமை, வேலைவாய்ப்புயின்மை, ஊழல், குற்றம், ஊடுருவல் ஆகியவற்றை பரப்பிவிட்டுள்ளது.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.