இந்தியா

'அப்பா அம்மாவை கொன்றார்'.. 4 வயது மகள் வரைந்த ஓவியத்தால் போலீசில் சிக்கிய தந்தை

Published On 2025-02-18 14:45 IST   |   Update On 2025-02-18 14:45:00 IST
  • 2019 ஆம் ஆண்டு சந்தீப் புதோலியா என்ற நபரை இப்பெண் திருமணம் செய்துள்ளார்.
  • திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் 27 வயது பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். முதலில் இதை தற்கொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவளது கணவர் மற்றும் மாமியார் தான் தங்கள் மகளின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.

2019 ஆம் ஆண்டு சந்தீப் புதோலியா என்ற நபரை இப்பெண் திருமணம் செய்துள்ளார். கணவரின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் வரதட்சணை கொடுக்க பெண்ணின் தந்தை தெரிவித்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொடுமைப்படுத்த, இது தொடர்பாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளிக்க பின்னர் இருவீட்டாரும் சமரசத்துக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்தது அவளது மாமியாருக்கு பிடிக்கவில்லை என்று பெண்ணின் தந்தை தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த கொலையை நேரில் பார்த்த அப்பெண்ணின் 4 வயது மகள், தாயை அடித்துக்கொன்று தந்தை தூக்கில் தொங்கவிட்டது போன்று ஓவியம் வரைந்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

Similar News