இந்தியா

தெலுங்கானாவில் இருந்து சென்னை வந்த ரெயிலில் தீவிபத்து: பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2024-12-23 04:25 GMT   |   Update On 2024-12-23 04:25 GMT
  • பி-4 பயணிகள் பெட்டியின் அடியிலிருந்து திடீரென புகை வந்தது.
  • பயணிகள் உயிர் பயத்தில் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், காச்சி குடாவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது.

ரெயில் காட்வாலா, ராஜோலி ரெயில் நிலையங்களை கடந்து நேற்று இரவு கடவாலா ரெயில் நிலையத்திற்கு வந்தது நின்றது. பயணிகள் ரெயிலில் இருந்து ஏறி, இறங்கி கொண்டு இருந்தனர்.

அப்போது பி-4 பயணிகள் பெட்டியின் அடியிலிருந்து திடீரென புகை வந்தது. பின்னர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.


இதனைக் கண்ட பயணிகள் உயிர் பயத்தில் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் ரெயில் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் ரெயில் பெட்டியை ஊழியர்கள் சரி செய்த பிறகு காலதாமதமாக ரெயில் மீண்டும் சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News