இந்தியா

பாகிஸ்தான் வான்வழியில் பிரதமர் மோடி?

Published On 2024-08-26 16:05 GMT   |   Update On 2024-08-26 16:05 GMT
  • வரும் வழியில் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்தியதாக தகவல்.
  • பாகிஸ்தான் வான்வழியில் சுமார் 46 நிமிடங்கள் பறந்ததாக தெரிவித்தது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் போலாந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இரு நாடுகளுக்கு அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி வரும் வழியில் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த செய்தி நிறுவனம் இதனை தெரிவித்து இருக்கிறது. எனினும், இது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியில் சுமார் 46 நிமிடங்கள் பறந்ததாக தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியில் காலை 10.15 மணிக்கு நுழைந்து காலை 11.01 மணிக்கு வெளியேறியது. சித்ரல் வழியே பாகிஸ்தானில் நுழைந்த விமானம் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் வழியே அம்ரித்சர் வந்துள்ளது.

Tags:    

Similar News