இந்தியா
தென் ஆப்பிரிக்காவில் இருந்து தங்கம் வாங்கி துபாய் வழியாக கடத்திய ரன்யா ராவ்- போலீஸ் விசாரணை அறிக்கையில் தகவல்

தென் ஆப்பிரிக்காவில் இருந்து தங்கம் வாங்கி துபாய் வழியாக கடத்திய ரன்யா ராவ்- போலீஸ் விசாரணை அறிக்கையில் தகவல்

Published On 2025-03-27 07:52 IST   |   Update On 2025-03-27 07:52:00 IST
  • ரன்யா ராவுக்கு சொந்தமான நகைக்கடை துபாயில் உள்ளது.
  • தென் ஆப்பிரிக்காவின் உள்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று துபாய் நகைக்கடைக்கு தங்கத்தை கொண்டு வந்துள்ளனர்.

பெங்களூரு:

துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யா ராவை கடந்த 3-ந்தேதி டெல்லியை சேர்ந்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கம் கடத்தலில் நடிகையின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைதாகி உள்ளார்.

இந்த வழக்கில் போலீசார் விசாரணை அறிக்கையை தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இதில் பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளது. அதாவது நடிகை ரன்யா ராவ் மற்றும் தருண் ராஜு ஆகியோர் அமெரிக்கா பாஸ்போர்ட்டை வைத்து தங்கம் கடத்தியதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் தருண் ராஜு தான் மட்டும் 6 கிலோ தங்கம் கடத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், ரன்யா ராவ் மூலம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து துபாய்க்கு தங்கம் கடத்தி வந்துள்ளார்.

அதாவது ரன்யா ராவுக்கு சொந்தமான நகைக்கடை துபாயில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் உள்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று துபாய் நகைக்கடைக்கு தங்கத்தை கொண்டு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தருண் ராஜுவின் பாஸ்போர்ட்டில் ஜெனீவா செல்வதாக கூறி, துபாயில் இருந்து பெங்களூருவுக்கு நடிகை ரன்யா ராவ் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News