இந்தியா
null

ரோகித் சர்மா உடல் பருமனை குறைக்க வேண்டும்.. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கருத்தால் சர்ச்சை

Published On 2025-03-03 13:34 IST   |   Update On 2025-03-03 14:00:00 IST
  • ரோகித் சர்மா உடல் பருமன் கொண்டுள்ளார்.
  • அவர் உடல் எடையை குறைக்க வேண்டும்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதி சுற்று போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடுகிறது.

இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷமா முகமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.

இவரது கருத்துக்கு சமூக வலைதளத்தில் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரோகித் சர்மா குறித்த காங்கிரஸ் விமர்சனத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறும் போது, "காங்கிரசுக்கு அவமானம். தற்போது அவர்கள் இந்திய கிரிக்கெட் கேப்டனை நோக்கி செல்கிறார்கள்."

"இந்திய அரசியலில் தோல்வியடைந்த பிறகு ராகுல் காந்தி இப்போது கிரிக்கெட் விளையாடுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? காங்கிரஸ் செய்தி தொடர்பாளரின் கருத்து கட்சியின் அவசரகால மன நிலையை பிரதிபலிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியை எல்லா வழியிலும் ஆதரிக்கும் ஒவ்வொரு தேச பக்தரையும் அவமதிப்பதாகும். காங்கிரஸ் விமர்சனத்தை நான் கேள்வி கேட்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

Tags:    

Similar News