இந்தியா

ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல- தேர்தல் ஆணையம்

Published On 2025-03-03 13:12 IST   |   Update On 2025-03-03 14:08:00 IST
  • ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண்கள் 2 நபர்களுக்கு கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
  • போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜக சதி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜக சதி செய்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்களின் வாக்காளர் அட்டை EPIC எண்கள், ஹரியானா, குஜராத் மற்றும் பஞ்சாபில் வசிக்கும் மக்களின் வாக்காளர் அட்டை EPIC எண்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

EPIC எண்கள் என்பது ஒவ்வொரு வாக்காளருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் 10 இலக்க வாக்காளர் அடையாள அட்டை எண்ணாகும்.

இந்நிலையில், மமதா பானர்ஜி குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

"வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல. EPIC எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவர்கள் பிறந்த தேதி, பேரவைத் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டிருக்கும். ஆகவே ஒரே ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் இருந்தாலும் ஒருவர் அவருடைய தொகுதியில் உள்ள நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க முடியும்" என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News