இந்தியா
கிர் தேசிய பூங்காவை பார்வையிட்டார் பிரதமர் மோடி
- கிர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
- பிரதமர் மோடி தன்னுடைய கேமராவில் சிங்கங்களை படம் பிடித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கிர் வனவிலங்கு சரணாலயத்தின் தலைமையகமான சாசனில் நடைபெறும் தேசிய வனவிலங்குகள் வாரிய கூட்டத்திற்கு தலைமை தாங்குவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக குஜராத் வந்தடைந்தார்.
இந்நிலையில், உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு கிர் தேசிய பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கங்களை பார்வையிட்ட பிரதமர், தன்னுடைய கேமராவில் சிங்கங்களை படம் பிடித்தார்.
முன்னதாக பிரதமர் மோடி புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமான சோம்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடி ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது