முதல் மந்திரி பினராயி விஜயனுடன் சசி தரூர் செல்பி: கடுப்பான காங்கிரஸ்
- அமெரிக்காவில் பிரதமர் மோடி டிரம்பை சந்தித்ததை பாராட்டி அறிக்கை வெளியிட்டார்.
- சசி தரூரின் செயல்கள் காங்கிரஸ் கட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் இருந்து 4 முறை தொடர்ந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரசை சேர்ந்த சசிதரூர்.
மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய மந்திரியாக பதவி வகித்த சசி தரூர், ஐ.நா.சபையில் உயர் பதவி வகித்தவர்.
அமெரிக்காவில் பிரதமர் மோடி-டொனால்டு டிரம்ப் சந்திப்பை பாராட்டி அறிக்கை வெளியிட்டது. இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல் மந்திரி பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் புகழ்ந்து தள்ளியது என இவரது செயல்கள் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தை கடுப்பாக்கியது.
மேலும், பிப்ரவரி 25-ம் தேதி மத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சசி தரூர் இதற்கெல்லாம் உரிய விளக்கத்தை அளித்துவந்தார்.
இந்நிலையில், கேரள கம்யூனிஸ் கட்சியின் முதல் மந்திரி பினராயி உடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அளித்த விருந்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்துகொண்டார். விருந்து நிகழ்ச்சியின்போது சசிதரூர் பினராயைச் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது காங்கிரஸ் மேலிடத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துயுள்ளது.